ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன
4 நாட்கள் பயணமாக இந்தியா சென்றடைந்தார்


ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன 4 நாட்கள் பயணமாக இந்தியாசென்றுள்ளார்.. இவர் தனது முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா சென்றுள்ளார். டில்லி விமான நிலையத்தில் இலங்கை ஜனாதிபதியை இந்திய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வரவேற்றார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு நாளை 10 மணிக்கு இந்திய குடியரசுத் தலைவர் மாளிகையில் அரசு முறை வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. நாளை நண்பகல் 12 மணியளவில் பிரதமர் மோடியை  ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சந்திக்க உள்ளார்.
இலங்கையில் தமிழர்களுடனான அமைதி மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகள், பொருளாதாரம், மறுகுடியேற்ற விவகாரங்கள், தமிழர் பகுதியில்  இராணுவத்தை திரும்ப பெறுதல், தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கும் சட்டத்தை நிறைவேற்றுவது, தமிழக மீனவர் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு முக்கிய  அம்சங்களும் பேச்சுவார்த்தையில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறதுபொருளாதாரம், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளன.

இதனைத்தொடர்ந்து, 17 ஆம் திகதி  பீகாரில் உள்ள புகழ்பெற்ற புத்த மத  கோயிலில் புத்தகயாவுக்கும், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன செல்ல உள்ளார். 18 ஆம் திகதி  அவர் நாடு திரும்புகிறார்.








0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top