உலகக் கிண்ணக்  கிரிக்கெட் போட்டி

ரோகித் சர்மாவின் விக்கெட்டை கைப்பற்றினார் சோகைல்கான்

உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர் ரோகித் சர்மாவின் விக்கெட்டை, சோகைல்கான் கைப்பற்றினார்.
உலகக் கிண்ணக் கிரிக்கெட்டில் இன்று அடிலெய்டில் நடைபெறும் முக்கியத்துவம் வாய்ந்த லீக் ஆட்டத்தில் (‘பிபிரிவு) பரம எதிரிகளான இந்தியாவும், பாகிஸ்தானும் கோதாவில் இறங்கியுள்ளன. உலகம் முழுவதும் அதிகமானோர் பார்க்கும் கிரிக்கெட் மோதலாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் ரசிகர்கள் பேராவலுடன் போட்டியை பார்த்து வருகின்றனர். மைதானத்திற்கு வெளியேவும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளின் ரசிகர்கள் குவிந்துள்ளனர். போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற இந்திய அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்து விளையாடி வருகிறது.
இந்திய அணி 24 ஓவர்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து127 ஓட்டங்களுடன் விளையாடி வருகிறது. தவான் 57ஓட்டங்களுடனும் (5பவுண்டரி, ஒரு சிக்சர், விராட் கோலி 52 (5பவுண்டரி) ஓட்டங்களுடனும் விளையாடி வருகின்றனர். இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மாவின் விக்கெட்டை சோகைல் கான் கைப்பற்றினார். 7.3 ஓவரில் சோகைல்கான் பந்தில் ரோகித் சர்மா புல் சாட் அடிக்க முயன்றார். ஆனால் அது மிஸ்பாவின் கைகளில் தஞ்சம் புகுந்தது. இதையடுத்து 15 ஓட்டங்களில் ரோகித் சர்மா வெளியேறினார். இதனையடுத்து விராட் கோலி களமிறங்கி விளையாடி வருகிறார்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top