கல்முனை சாஹிபு வீதியில் சுமார் 80 இலட்சம் ரூபா பெறுமதியான

கார் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரை

(படங்கள்)

கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை குடியில் ஒரே நேரத்தில் சுமார் 80 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று வாகனங்களுக்கு தீக்கிரயாக்கப்பட்டு  சேதம் ஏற்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இந்த சம்பவம் இன்று 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.00 மணியளவில்  இடம் பெற்றதாகவும், இதன் போது வீட்டில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த கார் ஒன்றும், மூன்று மோட்டார் சைக்கிள்களும் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாகவும், வாகன உரிமையாளர் ஜாபீர் என்பவரால் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனைக் குடி சாஹிபு வீதியில் வசிக்கும் வர்த்தகரான .எம்.ஜபீர் என்பவரது வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களே இனந்தெரியாதோரால் இவ்வாறு தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளது. தீயினால் வீட்டின் முன் பகுதிக்கும் சிறு சேதம் ஏற்பட்டுள்ளது.
உதுமாலெப்பை GS யின் வீட்டுக்கு முன்னுள்ள வீதியில்(ஈராக் ஒன்றியம் அமைந்துள்ள வீதியில் )பெளமியாஸ் வீட்டுக்கு அருகாமையில் உள்ள ரிஸ்லியின் வீட்டில்தான் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக் அறிவிக்கப்படுகின்றது
அயலவர்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப் பட்டதால் வீட்டுக்கு ஏற்படவிருந்த பாரிய சேதம் தவிர்க்கப் பட்டுள்ளதாக அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.











0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top