சோமாலியாவில் ராணுவ முகாம் மீது
அல் ஷபாப் தீவிரவாதிகள் தாக்குதல்: 10 வீரர்கள் பலி
சோமாலியா நாட்டின் தலைநகரான மொகடிஷு நகரின் தென்மேற்கில் உள்ள அப்கூயே நகரில் உள்ள ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பத்துக்கும் அதிகமான ராணுவ வீரர்கள் பலியானதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள அல் ஷபாப் தீவிரவாத இயக்கம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கார் குண்டு மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment