சுகமடைந்து வருகிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா
கவர்னர் மாளிகை வெளியிட்ட அறிக்கை
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் தேறி வருகிறார்' என, தமிழக கவர்னர் வித்யா சாகர் ராவ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, கவர்னர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், முதல்வர் ஜெயலலி தாவை பார்ப்பதற்காக, நேற்று மாலை,6:45 மணிக்கு, தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் சென்றார்.
அவரிடம், மருத்துவ மனை தலைவர் பிரதாப் ரெட்டி, முதல்வருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்துவிளக்கினார்.
அதன்பின், முதல்வர் சிகிச்சை பெறும் வார்டுக்கு சென்ற கவர்னரிடம், அங்கிருந்த டாக்டர்களும் சிகிச்சை பற்றி விவரித்தனர்.
முதல்வர் உடல்நலம் தேறி வருவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த கவர்னர், சிறப்பாக சிகிச்சை அளித்து வரும் டாக்டர்களுக்கு நன்றியும் கூறினார்.அத்துடன், பழக்கூடை வழங்கி, முதல்வர் விரைவில் குணமடைய வாழ்த்தும் தெரிவித்தார்.
கவர்னர், மருத்துவமனைக்கு சென்ற போது, லோக் சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள் பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, வேலுமணி, விஜயபாஸ்கர், தலைமைச் செயலர் ராமமோகன ராவ், தமிழக அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் மற்றும் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆளுநர் அறிக்கை
0 comments:
Post a Comment