“அம்மா நான்
போக மாட்டேன், உங்களுடனே இருக்கின்றேன்”
கொலை செய்யப்பட்ட
4 வயது சிறுவனின் தாய் வாக்குமூலம்
கணவன்
என்னை விட்டுச்சென்ற
நிலையில் மகனை
வளர்க்க முடியாமல்
ஒரு பெண்ணிடம்
ஒப்படைத்தேன், ஆனால் அவன் இறந்து விட்டான்
என நாவற்குடாவில்
அடித்து கொலை
செய்யப்பட்ட சிறுவனின் உண்மையான தாயார் வாக்குமூலமளித்துள்ளார்.
கடந்த
செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு, நாவற்குடாவில்
சிறுவன் ஒருவர்
அடித்து கொலை
செய்யப்பட்டிருந்தார்.
இந்த
சம்பவத்தில் குறித்த சிறுவனின் வளர்ப்புத்தாய் கைது
செய்யப்பட்ட நிலையில், தற்போது உண்மையான தாயையும்
கைது செய்து
அவரிடம் வாக்குமூலம்
பெறப்பட்டுள்ளது.
அதில்
உண்மையான தாய் தெரிவித்திருப்பதாவது,
“எனது
மகன் வயிற்றிலிருக்கும்
போதே எனது
கணவர் என்னை
விட்டுப்பிரிந்து மறுமணம் புரிந்து கொண்டார்.
என்னுடன்
எனது உறவினர்களும்
பேசுவது கிடையாது.
எனது வறுமை
நிலையின் காரணமாக
மகனை வளர்க்க
முடியாமல் சிரமங்களுக்கு
முகம் கொடுத்தேன்.
இந்த
நிலையில் தான்
நாவற்குடாவைச் செர்ந்த பெண் ஒருவர் எனக்கு
அறிமுகமானார். என்னுடைய வறுமை நிலையை உணர்ந்துகொண்ட
குறித்த பெண்
எனக்கு உதவுவதற்கு
முன்வந்தார்.
எனது
மகனை வளர்ப்பதாகவும்,
பணம் எதுவும்
வேண்டாம் என்றும்
எனக்கு கூறினார்.
இதையடுத்து எனது மகனை 2016.11.31 அன்று அவரிடம்
ஒப்படைத்தேன்.
“அம்மா
நான் போக
மாட்டேன், உங்களுடனே
இருக்கின்றேன்” என எனது மகன் பல
முறை என்னிடம்
தெரிவித்திருந்தான்.
ஆனால்
எனது மனதை
கல்லாக்கிக்கொண்டு அவனை குறித்த
பெண்ணிடம் ஒப்படைத்தேன்.
ஆனால் தற்போது
எனது மகன்
இறந்து விட்டதாக
தெரிவிக்கின்றனர்” என குறித்த
பெண் கண்ணீருடன்
தனது வாக்குமூலத்தை
பதிவு செய்துள்ளார்.
நாவற்குடாவில்
மரணமடைந்த குறித்த
சிறுவன் மாடிப்படியிலிருந்து
விழுந்ததாக வளர்ப்புத்தாய் கூறியிருந்த
போதும், ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டே குறித்த
சிறுவன் உயிரிழந்துள்ளதாக
பிரேதபரிசோதனையில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து
கைது செய்யப்பட்ட
வளர்ப்புத்தாய் எதிர்வரும் 28ஆம் திகதி வரை
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இது குறித்த செய்தி வருமாறு,
மட்டக்களப்பு
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 04 வயது
சிறுவன்ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்ததாக சந்தேகத்தின்
பேரில் பெண்
ஒருவர் கைது
செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடா மாதர்
வீதியில் 04வயது சிறுவன் ஒருவர் அடித்துக்கொலைசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த
சிறுவனின் வளர்ப்பு
தாயார் ஒருவர்
குறித்த சிறுவனை
தாக்கிய நிலையில்
அவரை ஆரையம்பதி
வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
இந்தநிலையில்
குறித்த சிறுவன்
ஏற்கனவே உயிரிழந்திருந்தாகவும்
அது தொடர்பில்
வைத்தியசாலையினால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டிருந்ததாகவும்
பொலிஸார் தெரிவித்தனர்.
இது
தொடர்பிலான விசாரணையை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளதுடன்
இது தொடர்பில்
குறித்த வளர்ப்பு
தாய் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும்
பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த
சிறுவனின் சடலம்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி
பொலிஸார் மற்றும்
மட்டக்களப்பு குற்றதடவியல் பிரிவு பொலிஸாரும் இணைந்து மேற்கொண்டனர்.
குறித்த
சிறுவனை குறித்த
பெண் சுமார்
ஆறு மாதங்களுக்கு
முன்பாக தத்தெடுத்து
வளர்த்துவந்துள்ளதாகவும் அயலவர்கள் தெரிவித்தனர்.
ஏற்கனவே
ஒரு பெண்பிள்ளையினை
தத்தெடுத்து வளர்த்து வந்த நிலையிலேயே குறித்த சிறுவனையும் தத்தெடுத்து
வளர்த்து வந்துள்ளதாகவும் அயவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சென்ற மட்டக்களப்பு
நீதிவான் நீதிமன்ற
நீதிபதி எம்.கணேசராஜா குறித்த
சம்பவம் தொடர்பில்
விசாரணைகளை மேற்கொண்டார்.
சந்தேகத்தின்
பேரில் கைதுசெய்யப்பட்ட
தாய் மற்றும்
வளர்ப்பு தாய் இருவரையும்
எதிர் வரும்
28ஆம் திகதி
வரை விளக்கமறியலில்
வைக்குமாறு நீதவான் நீதிமன்ற நீதிபதி
உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில்
சந்தேக நபரான
வளர்ப்பு தாய்
ஏற்கனவே ஒரு
பெண் பிள்ளையினை
தத்தெடுத்து வளர்த்து வருகின்ற நிலையில் குறித்த
எட்டு வயது
பெண்பிள்ளையை சிறுவர் காப்பகத்திற்கு ஒப்படைக்குமாறும் , சந்தேக நபரான வளர்ப்பு தாயின்
மனநிலை தொடர்பான
வைத்திய அறிக்கையினை
சமர்ப்பிக்குமாறும் நீதவான்
நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா பொலிசாருக்கு
உத்தரவு பிறப்பித்துள்ளார்
.
0 comments:
Post a Comment