நடிகை ஜெயசுதாவின் கணவர்
மாடியில் இருந்து குதித்து தற்கொலை
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பாண்டியன்' திரைப்படத்தில்
அவருக்கு சகோதரியாக நடித்த ஜெயசுதா, பல படங்களில் நாயகியாகவும் குணசித்திர நடிகையாகவும்
நடித்துள்ளார். இந்நிலையில் அவரது கணவரும் பாலிவுட் நடிகர் ஜிதேந்திராவின் சகோதருமான
நிதின்கபூர் மும்பையில் உள்ள குடியிறுப்புப் பகுதியின்
மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
1995ஆம் ஆண்டு ஜெயசுதா-நிதின்கபூர் திருமணம் நடந்தது. இவர்களுக்கு
ஷ்ரேயன், நிஹர் என்ற இருமகன்கள் உள்ளனர். பிரபல தயாரிப்பாளரான நிதின்கபூர் சமீபத்தில்
தனது மகன் ஷ்ரேயன் நடித்த ஒரு படத்தை தயாரித்திருந்தார். இந்த படம் படுதோல்வி அடைந்தது.
இந்த படம் உட்பட அவர் தயாரித்த வேறுசில படங்களும் தோல்வியை தழுவியதால்
கடும் நிதி நெருக்கடி காரணமாக அவர் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாகவும்,
இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. நிதின்கபூரின் இறுதிச்சடங்கு
மும்பையில் நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர் ரெட்டி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார் ஜெயசுதா. செகந்திராபாத் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதன் பின்னர், தெலங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டது. அப்போதும் காங்கிரஸ் தரப்பில் செகந்திராபாத் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் வெற்றி பெறவில்லை. இதனை தொடர்ந்து அரசியலில் இருந்து ஜெயசுதா ஒதுங்கி இருந்தார்.
இந்நிலையில், கடந்தாண்டு, முதல்வர் சந்திரபாபு நாயுடுவை அவரது இல்லத்தில் ஜெயசுதா சந்தித்து, தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



0 comments:
Post a Comment