சோமாலியா கடற்கொள்ளையினரால் கடத்தப்பட்ட கப்பலிலுள்ள
இலங்கையர்களை மீட்பதற்கு நடவடிக்கை
சோமாலியா கடற்கொள்ளையினரால் கடத்தப்பட்ட கப்பலில் இலங்கையைச் சேர்ந்த எட்டு பேர் இருப்பதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுத் தெரிவித்துள்ளது.
இந்த கடத்தல் சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.
கப்பலில் உள்ள இலங்கையர்களுடன்; தொடர்ச்சியாக தொடர்புகளை மேற்கொண்டு வருவதாகவும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.இந்தக் கப்பல் இலங்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது டுபாய் நிறுவனத்திற்குச் சொந்தமானது. கப்பலையும் அதில் உள்ள ஊழியர்களையும் மீட்பதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் கடற்படை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

0 comments:
Post a Comment