டுபாயில்
உள்ள உலகின் மிகஉயர்ந்த கட்டிடமான
புர்ஜ் கலீபா
கட்டிடத்தில் தீப்பிடித்ததாக வெளியான
உலகின்
மிக உயரமான
கட்டடம் என்ற
பெருமையைப் பெற்றுள்ள டுபாயின் புர்ஜ் கலிபாவில்
தீ பற்றியதாக
செய்திகள் வெளியானது.
செய்திகள் மட்டும்
அல்லாமல் ஏராளமான
புகைப்படங்களும் வெளியாகின.
ஆனால்,
828 மீட்டர் உயரம் உள்ள அந்த கட்டடத்தில்
எந்த தீ
விபத்தும் ஏற்படவில்லை
என்றும், பனி
மூட்டமும், கட்டடத்தை நெருங்கும் பனிக் காற்றின்
வெளிச்சமும் தான் கட்டடத்தில் இருந்து புகை
வருவதைப் போன்ற
தோற்றத்தை ஏற்படுத்தியதாக
நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.
உள்ளூர்
வாசிகள் தெரிவித்த
தகவலை அடுத்து
ஏராளமான அம்புலன்ஸ்களும்,
மீட்புக் குழுவினரும்
கட்டடத்தை சுற்றி
வளைத்தனர். இந்த சம்பவத்தை பொலிஸாரும், அந்த
கட்டிட நிர்வாகிகளும்
திட்டவட்டமாக மறுத்துள்ளனர். புர்ஜ் கலீபா கட்டிடத்தில்
பனிமூட்டம் காரணமாக புகை போன்று காணப்பட்டது.
இதனை சிலர்
படம்பிடித்து, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதால், தீ
பிடித்ததாக வதந்தி பரவியுள்ளது என நிர்வாக
தரப்பில் கூறப்பட்டுள்ளது.
எனவே இதனை
யாரும் நம்பவேண்டாம்
என பொலிஸார்
கேட்டுக் கொண்டுள்ளனர்.
இது
போன்று சமூக
வலைத்தளங்களில் தவறான செய்தியை பரப்புவோர் மீது
கடும் நடவடிக்கை
எடுக்கப்படும் என்றும் பொலிஸார் எச்சரித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம்
பரபரப்பு ஏற்பட்டதாக
அறிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment