கிழக்கு முதலமைச்சராக

ஹாபிஸ் நஸீர் அஹமட்?



கிழக்கு மாகாண முதலமைசச்ராக ஹாபிஸ் நஸீர் அஹமட்டை நியமிப்பதற்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் திர்மானித்துள்ளதாக தற்போது செய்திகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. இவரின் நியமனம் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின்  மாகாண சபை உறுப்பினர்களிடத்தில்  கையொப்பங்கள்  வாங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
முதலமைச்சருக்கு ஹாபிஸ் நஸீரின் பெயரை அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாகவும் இன்று மாலை அமைச்சர் பதவிக்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பில் முடிவெடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை, முதலமைச்சர் தெரிவில் பல்வேறு குளறுபடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் போக்கைக் கண்டித்து மாகாண சபை உறுப்பினர் ஒருவர் பதவியிலிருந்து விலகும் ராஜினாமாக் கடிதத்தை கையளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன..

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top