குழந்தை வளர வளர எந்த அளவில் பாலூட்ட வேண்டும்?
பிறந்த குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமான உணவு பால். அதிலும், முதல் ஆறு மாதத்திலிருந்து ஒரு வருடம் வரை தாய்பால் ஊட்ட வேண்டியது அத்தியாவசியமாகும்.
முதல் மூன்று மாதங்கள் 2-3 மணி நேரத்திற்கு ஒருமுறை 30 - 90 மில்லி என, ஒரு நாளுக்கு 8 - 12 முறை பாலூட்ட வேண்டும். ஓர் நாளுக்கு 250 - 700 மில்லி வரையிலான அளவு பாலூட்ட வேண்டும்.
3 வாரத்தில் இருந்து 3 மாதம் வரை : ஒரு நாளுக்கு 80 - 120 மில்லி அளவு பால், 6 - 8 முறை ஊட்ட வேண்டும். மொத்தம் ஒரு நாளுக்கு 700 - 950 மில்லி அளவிலான பால் ஊட்ட வேண்டும்.
மூன்றாவது மாதத்தில் இருந்து ஆறாவது மாதம் வரை, 120 - 240 மில்லி அளவிலான பால், 4 - 6 முறை ஓர் நாளுக்கு ஊட்ட வேண்டும். இதன் மூலம் ஓர் நாளுக்கு 700 - 950 மில்லி அளவிலான பால் ஊட்ட வேண்டும்.
6 - 9 மாதங்கள் : ஒரு நாளுக்கு 170 - 240 மில்லி அளவு பால், 6 முறை ஊட்ட வேண்டும். மொத்தம் ஒரு நாளுக்கு 950 மில்லி அளவிலான பால் ஊட்ட வேண்டும்.
9 - 12 மாதங்கள் : ஒரு நாளுக்கு 200 - 240 மில்லி அளவு பால், 3 - 5 முறை ஊட்ட வேண்டும். மொத்தம் ஒரு நாளுக்கு 700 மில்லி அளவிலான பால் ஊட்ட வேண்டும்.
12 + மாதங்கள் : ஒரு நாளுக்கு 120 மில்லி அளவு பால் / சோயா பால், தயிர் 4 முறை ஊட்டலாம்.
12 மாதங்களுக்கு பிறகு பாலுடன் சேர்த்து கரட், சாதம், பழங்களை கொடுக்க வேண்டும். ஏனெனில் குழந்தைகள் வளர வளர அதற்கு ஏற்றபடி உணவில் அளவில் மாறுதல்களை செய்ய வேண்டும்.

0 comments:
Post a Comment