பேஸ்புக் லைவ் வீடியோவில் இருக்கும் போதே
துப்பாக்கியால் சுட்டு
தற்கொலைக்கு முயன்ற இளைஞர்கள்
அமெரிக்காவில் மூன்று இளைஞர்கள் வினோதமான முறையில் ஆன் லைனில் இருக்கும் போதே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
இது இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் வெர்ஜினியா பகுதியை சேர்ந்த டி.ஜே.வில்லியம்ஸ் என்பவர் காரில் இருந்து கொண்டே பேஸ்புக் ஆன் லைன் வீடியோவில் பேசிக்கொண்டிருக்கிறார். அவரது இரண்டு நண்பர்கள் அந்த காரில் இருக்கின்றனர். இருவரும் வில்லியம்ஸை பார்த்தவண்ணம், பாடல்களை கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.
அப்போது திடீரென அவர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டனர். ஒரு மணி நேரத்திற்கு அதிகமான அந்த வீடியோ பதிவில் சுமார் 5 நிமிடம் 40 நொடிகள் துப்பாக்கிச் சூடு சத்தம் மட்டும் பதிவாகியுள்ளது. 20 முறை துப்பாக்கிச் சுடும் சத்தம் பதிவாகியுள்ளது. துப்பாக்கிச் சூட்டினை நோர்போக் பொலிஸ் துறை உறுதி செய்துள்ளது.
தற்கொலைக்கு முயன்ற மூன்று பேரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், அதில் இருவருக்கு பலத்த காயமும், ஒருவருக்கு உயிருக்கு ஆபத்தில்லா காயம் ஏற்பட்டுள்ளதாகவும் நோர்போக் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“நிம்மதியாக இருங்கள், அமைதியாக இருங்கள், நிம்மதியாக இருங்கள், தூங்க செல்லாதீர்கள், நிம்மதியாக இருங்கள்” என்ற குரல் வீடியோ பதிவில் ஒலித்தது.
https://youtu.be/6RMWoYbEHRM
0 comments:
Post a Comment