புதிய 1 ரூபா மற்றும் 5 ரூபா

நாணயக்குத்திகள் புழக்கத்தில்

 - இலங்கை மத்தியவங்கி




இலங்கை மத்தியவங்கி புதிதாக 1.00 ரூபா மற்றும் 5.00 ரூபா நாணயக் குத்திகளை புழக்கத்திற்கு விட்டுள்ளது.
நாணயக்குத்திகளில் உலோகங்கள் , கலப்பு உலோகங்கள் பித்தளை முளாமிடப்பட்ட உருக்கிலிருந்து (தங்கநிறம்) துருப்பிடிக்காத உருக்கிற்கு (வெள்ளிநிறம் ) மாற்றப்பட்டிருப்பதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

ஐந்து ரூபா நாணயக்குத்தியில் விளிம்பிலுள்ள எழுத்துக்கள் புதிய துருப்பிடிக்காத உருக்கிலான குத்தியில் நீக்கப்பட்டுள்ளன.


பரிமாணம் மற்றும் வடிவமைப்பு உள்ளிட்ட மற்றைய அனைத்து விபரங்களும் 2005 லிருந்து சுற்றோட்டத்திற்கு விடப்பட்ட ரூபா 1.00 மற்றும் ரூபா 5.00 நாணயக்குத்திகளை ஒத்ததாகவே தொடர்ந்தும் இருக்கும் என்றும் இலங்கை மத்தியவங்கி தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top