வெள்ளை சீனி மற்றும் கோழி இறைச்சி மீதான
கட்டுப்பாட்டு விலை நீக்கம்
வெள்ளை
சீனி , கோழி
இறைச்சி ஆகியவற்றுக்கு
விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்காக அரசாங்கம்
நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக
கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சு தெரிவித்துள்ளது.
இது
தொடர்பாக அமைச்சு
வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.
வெள்ளைசீனி மற்றும் பொய்லர் கோழி இறைச்சிக்காக
விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை
நீர்குவதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு ஒழுங்குகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கைத்தொமில் மற்றும்
வர்த்தக அமைச்சர்
றிசாட் பதியுதீன்
தெரிவித்துள்ளார்.
வாழ்க்கை
செலவு குழுக்கூட்டத்தில்
வெள்ளை சீனி
மற்றும் கோழி
இறைச்சிக்காக உள்ள நுகர்வோரின் தேவை , இறக்குமதி
விலை மற்றும்
வர்த்தக விலை
ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்ட பின்னர் இதற்கான
தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக
அமைச்சர் மேலும்
தெரிவித்தார்.
இதற்கமைவாக
வெள்ளைசீனிக்கு விதிக்கப்பட்டிருந்த 93.00 ரூபா
கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு நுகர்வோர் அதிகாரசபை
தீர்மானித்துள்ளது. பழுப்பு சீனிக்கான
கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டிருக்கவில்லை.
தோலுடனான கோழி
இறைச்சி ஒரு
கிலோவிற்காக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு
விலை 410.00 ரூபா ஆகும்.
தோலுடனான
கோழி இறைச்சிக்கு
விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலை
490.00 ரூபா ஆகும். இந்த கட்டுப்பாட்டுவிலையை நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment