"தாயகம்" அமைப்பினால், புங்குடுதீவு
விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான,
"உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியும், பரிசளிப்பு விழாவும்"
..
(அறிவித்தல்)
புங்குடுதீவு
தாயகம் சமூக
சேவையகம் அமைப்பின்
சார்பாக புங்குடுதீவிலுள்ள
அனைத்து விளையாட்டுக்
கழகங்களுக்குமிடையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியும்,
பரிசளிப்பு விழாவும் எதிர்வரும் சனி, ஞாயிறு
ஆகிய தினங்களாகிய
மார்ச் 18ஆம்,
19ஆம் திகதிகளில்
நடைபெறவுள்ளது.
இதன்படி,
மேற்படி உதைப்பந்தாட்ட
சுற்றுப்போட்டி, "தாயகம்" அமைப்பின்
நிறுவனர்களான, அமரர்கள் சொக்கலிங்கம் சீதேவிப்பிள்ளை (நாகேஷ்)
அவர்களில், அமரர் திருமதி.சொக்கலிங்கம் சீதேவிப்பிள்ளை
(நாகேஷ்) அவர்களின்
பிறந்த தினத்தை
(19.03) முன்னிட்டு, மேற்படி விளையாட்டுப்
போட்டி நடைபெற
உள்ளது.
இதன்படி
எதிர்வரும் 18.03.2017 சனிக்கிழமை அன்று
புங்குடுதீவிலுள்ள அனைத்து விளையாட்டுக்
கழகங்களுக்கிடையில் இருபத்தைந்து வயதுக்குட்பட்டோருக்கான
உதைபந்தாட்டப் போட்டி நடைபெற்று இறுதிச் சுற்றுக்கு
தெரிவு செய்யப்படும்
கழகங்களுக்கிடையிலான, இறுதிப் போட்டி
மறுதினமாகிய எதிர்வரும் 19.03.2017 ஞாயிற்றுக்கிழமை
நடைபெற்று கலை
நிகழ்ச்சிகளுடன், பரிசளிப்பு விழாவும் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.
இடம்
- அன்னை வேளாங்கண்ணி,
நசரேத் விளையாட்டுக்
கழக
மைதானம், புங்குடுதீவு.
காலம்
- 18, 19 மார்ச்
2017.
நேரம்
- 18 ம் திகதி
காலை எட்டு
மணிக்கும்,
19 ம்
திகதி மதியம்
ஒரு மணிக்கும்
சரியாக ஆரம்பமாகும்.
தலைமையுரை:
திரு.
எஸ்கே. சண்முகலிங்கம்
(சமூக சேவகர்,
முன்னாள் அதிபர்
மற்றும் தாயகம்
சமூக சேவையகத்தின்
போசகர்),
வாழ்த்துரை..
திருமதி
சுலோசனாம்பிக்கை தனபாலன் (தாயகம் சமூக சேவையகம்
அமைப்பின் தலைவர்)
பிரதம
விருந்தினர் உரை..
திரு.
இலட்சுமணன் இளங்கோவன் (சமூக ஆர்வலர் மற்றும்
வட மாகாணசபை
ஆளுநரின் செயலாளர்)
ஆசியுரை..
புங்குடுதீவு
சவேரியார் ஆலய
பங்குத் தந்தை
சிறப்பு
விருந்தினர்கள் உரை:
திரு.கா.குகபாலன்
ஓய்வு நிலைப்
பேராசிரியர், புவியியல்துறை யாழ். பல்கலைக் கழகம்)
திரு.
வ.அபராஜ்
(சுகாதார பரிசோதகர்)
திரு.க.வாகீசன்
(கிராம சேவகர்,
& தாயகம் அமைப்பின் ஆலோசகர்களில் ஒருவர்)
கௌரவ
விருந்தினர்கள் உரை:
திரு.
அருணாசலம் சண்முகநாதன்
(சமூக சேவகர்)
செல்வி.பொ. யமுனாதேவி
(தலைவி, வட
இலங்கை சர்வோதயம்,
புங்குடுதீவு)
திரு.
சதீஸ் (தலைவர்,
புங்குடுதீவு உலகமையம்),
வரவேற்புரை
:
செல்வி
காஞ்சனா (தாயகம்
சமூக சேவையகத்தின்
உப செயலாளர்)
நன்றியுரை
செல்வி
ஜெகநந்தினி முத்துக்குமாரு (செயலாளர், தாயகம் சமூக
சேவையகம்)
*** மேற்படி விளையாட்டுப் போட்டியில் முதன்முறையாக
"தாயகம்" சமூக சேவையகத்தினால்,
"தாயகம் விளையாட்டுக் கழகம்" உருவாக்கப்பட்டு, அதன் வீரர்களும் பங்குபெறுவது இங்கு
குறிப்பிடத்தக்கது.**
**** மேற்படி "திருமதி.சொக்கலிங்கம் (நாகேஷ்)
ஞாபகார்த்த" வெற்றிக்கிண்ண உதைபந்தாட்ட விளையாட்டுப் போட்டி
தொடர்பான கலந்துரையாடலும்,
போட்டி நிகழ்
தயாரித்தலும் (விளையாட்டு தேர்வுக்கான அட்டவணை
பட்டியல், மற்றும் நேரக் கணிப்பு) 15.03.2017 புதன்கிழமை மாலை நான்கு மணிக்கு
04.00 (16.00) மணிக்கு "தாயகம் சமூக
சேவையகம்" நூலகத்தில் நடைபெறும் என்பதையும், இதில்
அனைத்து விளையாட்டு
கழக பொறுப்பாளர்களையும்
சமூகமளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். நன்றி.
"தாயகம் சமூக சேவை அகம்",
புங்குடுதீவு -12 (077.1772852)
இவ்வண்ணம்
செல்வி
ஜெகநந்தினி முத்துக்குமாரு
செயலாளர்,
தாயகம்
சமூக சேவையகம்
புங்குடுதீவு
12.03.2017.
(077.1772852)

0 comments:
Post a Comment