முன்னாள் அமைச்சர் திருமதி ரேணுகா ஹேரத்
இன்று காலமானார்.
மத்திய மாகாணத்தின் எதிர்க்கட்சி முன்னாள் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திருமதி ரேணுகா ஹேரத் இன்று காலமானார்.
கண்டி பெரியாஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றிருந்த நிலையில் இவர் காலமானார். இறக்கும்போது இவருக்கு 72 வயது ஆகும்.
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் நிர்வாகக்காலத்தில் சுகாதார அமைச்சராக இவர் பணிபுரிந்தார்.
1983ம் ஆண்டு ஜூலை மாதம் இடம்பெற்ற இனக்கலவரத்தின் போது இவர் அங்கம் வகித்த இராகல அடங்கலாக வலப்பன தேர்தல் தொகுதிக்குட்பட்ட தமிழ் மக்களின் பாதுகாப்பிற்கு முன்னோடியாக செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment