பொத்துவில்,இறக்காமம் ஆகியவற்றிற்கு
தனித் தனி பிரதேச சபை செயலாளரை நியமித்தால் என்ன?
எல்.எம் இர்பான்
பொத்துவில் பிரதேச சபையின் நிரந்தர செயலாளராக
கடந்த ஒரு
வருடமாக கடமையாற்றியிருந்தார்.இங்கு கடமையாற்றிக்கொண்டு
அவர் இரண்டு
நாள் அட்டாளைச்சேனை
பிரதேச சபையின்
தற்காலிக (acting) செயலாளராக இருந்தமையும்
குறிப்பிடத்தக்கது.தற்போது அவர்
எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து இறக்காமம் பிரதேச
சபையின் நிரந்தர
செயலாளராகவும் பொத்துவில் பிரதேச சபையின் இரண்டு
நாள் தற்காலிக
(acting) செயலாளராகவும் இடமாற்றப்பட்டுள்ளார்.
தற்போது
பொத்துவிலுக்கு எந்தவிதமான அரசியல் அதிகாரங்களும் இல்லை.பொத்துவிலில் உள்ள
ஒரே ஒரு
சேவை வழங்கும்
நிறுவனமாக பிரதேச
சபையையே குறிப்பிடலாம்.அந்த பிரதேச
சபையின் செயலாளரை
தற்காலிகமாக்கியுள்ளமை அந்த மக்களின்
வயிற்றில் அடிக்கும்
செயற்பாடாகும்.இறக்காமம் பிரதேச சபை,பொத்துவில்
பிரதேச சபை
ஆகிய இரு
பிரதேச சபைகளையும் ஒப்பிடும்
போது இறக்காமத்தை
விட பொத்துவில்
மும்மடங்கால் அதிகரித்த சனத்தொகை கொண்ட பிரதேச
சபை என்பதையும்
கவனத்திற்கொள்க.
இது
தொடர்பில் பொத்துவில்
முக்கியஸ்தர்கள் பலரது கவனத்திற்கு கொண்டு
சென்ற போது
எந்த வித
பலனும் கிட்டவில்லை
என்பதை அறிய
முடிகிறது.தற்போது
பொத்துவில் மக்கள் காலா காலமாக ஆதரித்து
வரும் மு.காவை சேர்ந்தவரே
முதலமைச்சராக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.பொத்துவில்,இறக்காமம்
ஆகியவற்றிற்கு தனித் தனி பிரதேச செயலாளரை
நியமித்தால் என்ன? அது என்ன ஐ.நா சபை சென்று சாதிக்கும்
விடயமா?
துறையூர்
ஏ.கே
மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.
2017.03.08

0 comments:
Post a Comment