கிண்ணியாவில் தீவிர டெங்கு ஒழிப்பு

நடவடிக்கைகள் ஆரம்பம்

திருகோணமலை கிண்ணியாவில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
இப்பிரதேசத்தில் வேகமாக பரவிவரும் டெங்கு நோயைக்கட்டுப்படுத்துவது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இதற்கமைவாக சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன மற்றும் அனர்த முகாமைத்துவ அமைச்சர் அனுரபிரியதர்சன யாப்பா ஆகியோரின் வழிகாட்டலுக்கமைவாக டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் தீவிர நடவடிக்கைள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த கலந்துரையாடலில் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாத் பதியூதீன் மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதனைத்தொடர்ந்து கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் .எல். முஹம்மட் நஸீரின் தலைமையில் இன்று விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

400 க்கும் மேற்பட்டோர் டெங்குநோயினால் பாதிக்கப்பட்டிருப்பதோடு 14 பேர் உயிரிழந்திருப்தாகவும் பிராந்திய செய்தியாளர்கள்  தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து வைத்தியசாலையின் ஆளனி மற்றும் இடப்பாற்றாக்குறையினை தீர்த்து வைப்பதற்காக தற்காலிக கட்டிடத்தில் வைத்தியசாலை ஒன்றினை அமைப்பது தொடர்பாகவும், அதற்கு தேவையான தாதியர்கள், வைத்தியர்களை ஏனைய பிராந்தியங்களில் இருந்து வரவழைப்பதற்கான நடவடிக்கைகளும் இன்று மேற்கொள்ளப்பட்டதாகவும் அறிவிக்கப்படுகின்றது.
இதேவேளை,கிண்ணியா வைத்தியாலையின் தனியான டெங்கு வைத்திய பிரிவை ஜாயா வித்தியாலயத்தில் ஆரம்பிக்க நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது.

அதிகரித்துவரும் டெங்கு தாக்கத்திட்குட்பட்டவர்களை கவணிக்க ஜாயா வித்தியாலய கட்டிடத்தை தற்காலிகமாக புனரமைத்து தனியான பிரிவை ஆரம்பிக்க மாவட்ட அரசாங்க அதிபர் , மாகாண சுகாதார அமைச்சர் நசீர் , பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மகரூப் , இராணுவ ,பொலிஸ் உதவியுடன் நடவடிக்கை எடுத்துள்ளனர்.







0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top