பொதுமக்களை நேரடியாக நிர்வாகத்தில்
இணைத்துக்கொள்ளும் 'கிராமிய
அரசாங்கம்'
பொதுமக்களை
நேரடியாக நிர்வாகத்தில்
இணைத்துக் கொள்ளும்
வகையில் 'கிராமிய
அரசாங்கம்' எனும் கொள்கையை
நடைமுறைப்படுத்த சமகால நல்லாட்சி அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
அமைச்சரவை
தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு இன்று
அரசாங்க தகவல்
திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போது பாராளுமன்ற மறுசீரமைப்பு
மற்றும் ஊடகத்துறை
அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான
கஜந்த கருணாதிலக
கருத்து தெரிவிக்கையில்
,
கிராமிய
அரசாங்க எண்ணக்
கொள்கைப்பத்திர வரைபும் மற்றும் அலுவல் தொடர்பான
விடயங்களை மேற்கொள்வதற்காக
பாராளுமன்ற குழுக்களின் கருத்துக்களும்
பெற்றுக்கொள்ளப்படவுள்ளது என்றும் தெரிவித்தார்.
இதற்காகவேண்டி
பிரதமர் அலுவலக
இணையத்தளத்தில் இந்த விடயங்களை பிரசுரிப்பதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு
அமைச்சரவை அங்கீகாரம்
வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்த
செய்தியாளர் மாநாட்டில் பிரதிஅமைச்சர் அஜித்பெரேரா , சர்வதேச
வர்த்தக இராஜாங்க
அமைச்சர் சுஜீவ
சேனசிங்க ஆகியோர்
கலந்துகொண்டனர்.
அமைச்சர்
கஜந்த கருணாதிலக
தொடர்ந்து கருத்துதெரிவிக்கையில்
,
10 வருடங்களுக்கு
ஒருமுறை முன்னெடுக்கப்படும்
குடிசன மதிப்பீடு
2021ம் ஆண்டு
மேற்கொள்ளப்படவுள்ளது.
இதற்கு
தேவையான நிதியை
பெற்றுக்கொள்வதற்காக தேசிய கொள்கைகள்
மற்றும் பொருளாதார
விவகாரங்கள் தொடர்பான அமைச்சர் என்ற ரீதியில்
பிரதமர் ரணில்
விக்ரமசிங்க சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம்
வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment