மியான்மரில் நூற்றுக்கணக்கான ரொஹிங்கியா
இஸ்லாமியர்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை!
மியான்மரில்
நூற்றுகணக்கான ரொஹிங்கியா இஸ்லாமியர்கள் பாலியல் பலாத்காரம்
செய்யப்படுவதும், கொலை செய்யப்படுவதுமாக இருப்பதாக அதிர்ச்சி
தகவல்கள் வெளியாகியுள்ளது.
மியன்மாரில்
சுமார் பத்து லட்சம் ரொஹிங்கியா
இஸ்லாமியர்கள் வாழ்ந்தாலும் அவர்களுக்கு அங்கே குடியுரிமை
இல்லை.
அந்நாட்டின்
ராணுவத்தினர் அவர்களை கொடூரமாக கையாள்கின்றனர். இது
சம்மந்தமாக பல வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியாகி வருகிறது.
கொடூரமான
கொலைகள், மோசமான
பாலியல் பலாத்காரம்
காரணமாக கடந்த
ஆறு மாதத்தில்
இங்கிருந்து எழுபதாயிரம் பேர் வெளியேறியுள்ளனர்.
இது
குறித்து மியான்மர்
தலைவி ஆங்க்சான்
சூசி பதிலளிக்க
மறுத்து விட்டார்.
அவருக்கு
நெருக்கமான தலைவர்கள் கூறுகையில், இது மனித
குலத்துக்கு எதிரான குற்றங்களென்று தாங்கள் நம்பவில்லை
என்றும் இது
உள்நாட்டு விவகாரமேயன்றி
வெளிநாட்டு பிரச்சனையல்ல என கூறியுள்ளனர்.

0 comments:
Post a Comment