13 கிலோ கிராம் நிறையுடைய போதைப்பொருள் மீட்பு!

கிரான்ட்பாஸிலுள்ள மாடி வீட்டுக்குள் சிக்கிய மர்மங்கள்!!

பெருந்தொகை பணம், ஆடம்பர வாகனங்கள் மீட்பு!!!

கிரான்ட்பாஸ் - நாகலகம்விதிய பிரதேசத்தில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது 13 கிலோ கிராம் நிறையுடைய போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது தெரிந்தததே.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து பேர் கைது செய்யப்பட்டதுடன், போதைப்பொருள் வர்த்தகத்திற்காக பயன்படுத்தப்பட்ட சில வாகனங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு மீட்கப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 16 கோடி ரூபாவை தாண்டும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இந்த சந்தேக நபர்களுக்குள் பிரதான சந்தேக நபர் ஒருவர் உள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

13 கிலோகிராம் ஹேரோயினுடன் கடந்த 6 ஆம் திகதி நாகலகம்விதிய பிரதேசத்தில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் போது, போதைப்பொருள் வர்த்தகரிடம் உள்ள சொத்துக்கள் தொடர்பில் தகவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அவர் வழங்கிய தகவல்களுக்கமைய ஜப்பான் சூட்டி என்ற மிக பெரிய வர்த்தகரின் தொட்டலங்க மாதம்பிட்டி வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்று சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.

இரண்டு மாடி வீட்டின் மேல் மாடியில் நடத்தி செல்லப்பட்ட கோவில் போன்ற இடத்தை பரிசோதித்த போது அங்கு சுவருக்குள் மறைக்கப்பட்டிருந்த 80 லட்சத்து 70 ஆயிரதம் ரூபாய் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நாகலகமவிதிய பிரதேசத்தில் அமைந்துள்ள மற்றுமொரு கட்டடத்தை சோதனையிட்ட போது பிராடோ ரக ஜீப் வண்டிகள் இரண்டு, மோட்டர் வாகனங்கள் இரண்டு மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டுள்ளது.


ஹேரோயின் போதைப்பொருள் வர்த்தகரின் வீட்டை சுற்றிவளைக்கும் போது அவரது மனைவி மற்றும் குழந்தைகள் தப்பி சென்றுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.








0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top