'டோன்ற் வொறி' எல்லாம் இறைவன் நாட்டப்படி நடக்கும்
சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூரின் விண்ணப்பத்திற்கு
ஹக்கீம் அவர்களின் ஆறுதலான
பதில்!
.
ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸின் ஸ்தாபகச் செயலாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.எம்.ஏ. கபூர் அவர்கள் உம்ரா கடமைக்குச் செல்லும் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களிடம்
விடுத்த கோரிக்கைக்கு 'டோன்ற் வொறி' எல்லாம் இறைவன் நாட்டப்படி நடக்கும் என்று பதிலளித்ததாகத்
தெரிவிக்கப்படுகின்றது
அமைச்சர் ரவூப் ஹக்கீம்,
ஐந்து நாள்
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று 9
ஆம் திகதி வியாழக்கிழமை சவூதி அரேபியா பயணமானார்.
அத்துடன் புனித
உம்ரா கடமையையும்
நிறைவேற்றவுள்ளார்.
இன்று
மக்காவுக்கு புனித உம்ரா கடமையை நிறைவேற்றச்
செல்லும் முஸ்லிம்
காங்கிரஸ் கட்சியின்
தேசிய தலைவரும்
அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களின்
கொழும்பு இல்லத்திற்கு
அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும் சிரேஷ்ட
சட்டத்தரணியுமான எஸ்.எம்.ஏ. கபூர்
அவர்கள் சென்று
தலைவரிடம் 'சலாம்' சொல்லிவிட்டு
வழியனுப்ப வந்த
வேளையில் கூறியதாக தெரியவருவதாவது.
இக்கட்சி
மூலம் வழங்கப்படவிருக்கின்ற
தேசிய பட்டியல்
எம்.பி
க்கான நியமனத்தை
முதலில் அட்டாளைச்சேனைக்கும்
பின்பு தனக்கும்
அது கிடைக்க
வேண்டும் என
எல்லாத் 'தூஆ'
களுடனும் இதனையும்
தவறாது சேர்த்து
புனித கஃபத்துல்லாவில்
வைத்து எனக்காக
இறைவனிடம் வேண்டிக்கொள்ளுமாறு
கேட்டுக்கொண்டார் எனக் கூறப்படுகின்றது.
சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர்
அவர்களின் இத் திடீர் விண்ணப்பத்தையும்
கோரிக்கையையும் சற்ரேனும் எதிர்பாராத தலைவர் ரவூப் ஹக்கீம்
அவர்கள் சிரித்துக் கொண்டு
கபூர் அவர்களின்
தோழில் தட்டியவராக 'டோன்ற் வொறி'
( கவலைப்படாதீர்கள்) எல்லாம் இறைவன்
நாட்டப்படி நடக்கும் என்று கூறியதாக அங்கிருந்த
வந்த ஒருவர்
தெரிவித்துள்ளார்.
இந்
நிகழ்வின் போது
அம்பாறை மாவட்ட
கட்சியின் முக்கிய
அரசியல் பிரமுகர்கள்
பலரும் பார்த்திருந்து
புன்முறுவல் பூத்ததாகவும் செய்திகள் கசிந்துள்ளன.
இவ்விஜயத்தில் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ். தௌபீக், எம்.எச்.எம். சல்மான் ஆகியோரும் உடன் சென்றுள்ளனர்.

0 comments:
Post a Comment