வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு

குடிநீர் வழங்குவதற்காக தண்ணீர் பவுசர்கள்

மாவட்ட செயலாளர்களிடம் கையளிப்பு

வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக தண்ணீர் பவுசர்களைப் பெற்றுக்கொடுக்கும் விசேட நிகழ்ச்சித்திட்டம் இன்று 2ஆம் திகதி முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் கொழும்பு பாதுகாப்பு அமைச்சு வளாகத்தில் நடைபெற்றது.

வரட்சியான காலநிலை காரணமாக 15 மாவட்டங்களிலுள்ள 83 பிரதேச செயலாளர் பிரிவுகளில் பாதிக்கப்பட்டிருக்கும் 1,80,000 குடும்பங்களுக்கு தற்போது குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்தப் பணியை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி அவர்களின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதி அலுவலகத்தினால் இந்த தண்ணீர் பவுசர்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அதன் முதற்கட்டமாக 25 பவுசர்கள் மாவட்ட செயலாளர்களிடம் இன்று கையளிக்கப்பட்டன.

களுத்துறை, குருணாகலை, முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கு இந்த பவுசர்கள் வழங்கப்பட்டன.

அமைச்சர் வஜிர அபேவர்தன, பிரதி அமைச்சர் தினேஷ் கன்கந்த, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபேகோன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


இதேநேரம் உணவு உற்பத்தி தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் உற்பத்தி செய்யப்பட்ட நச்சுத்தன்மை அற்ற உணவுப்பொருட்ளை விற்பனைசெய்யும் நடமாடும் வாகனத்தையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top