முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமிற்கு எதிராக
கண்டண பேரணி! 


கொடும்பாவியை எரிப்பதற்கும் முயற்சி!!


இன்று 2015.02.06 ஆம் திகதி  சாய்ந்தமருது ஜும்ஆ மஸ்ஜித் முன்பாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமிற்கு எதிராக கண்டண பேரணி நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்களால் அவரின் கொடும்பாவியை எரிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தும் பொலிஸாரின்  தலையீட்டால் அது தடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படுகின்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டதுடன் அவரது உருவ பொம்மை ஒன்று நடு வீதியில் போடப்பட்டு பாதணிகளால் அடிக்கப்பட்டதையும் அந்த உருவ பொம்மையை எரிக்க முற்பட்டதையும் அவதானிக்க முடிந்தது.
எனினும் தீயிடப்பட்ட அந்த உருவ பொம்மையை பொலிஸார் உடனடியாக கைப்பற்றிதீயை அணைத்ததுடன் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதனைத் தொடர்ந்து பொலிஸாருக்கும் பொது மக்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டதுஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் அடிதடி பிரயோகமும் செய்தனர்பொலிஸாரிடம் இருந்து இந்த உருவ பொம்மையை கைப்பற்றுவதற்கு அவர்கள் முயற்சித்த போதிலும் நீண்ட இழுபறிக்குப் பின்னர் அது பொலிஸ் ஜீப்பில் ஏற்றிச் செல்லப்பட்டது.
சுமார் அரை மணி நேரம் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதுஇதனால் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டிருந்தனஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாகவே அங்கு
பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி அம்மாகாண சபையின் மு.கா. குழுத் தலைவர் .எம்.ஜெமீலுக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் அதனை முன்னாள் மாகாண அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமதுக்கு வழங்க கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் தீர்மானித்துள்ளமக்கு எதிர்ப்புத் தெரிவித்தே தாம் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டனர்.

























0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top