செல்பி சர்ச்சையில் சிக்கியுள்ள
பாகிஸ்தான் பாடகி



பாகிஸ்தானின் பிரபல பாடகி கோமல் ரிஸ்வி செல்பி விவகாரத்தில் சிக்கியுள்ளார். இன்றைக்கு செல்பி இளம் தலைமுறை மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களிடமும் தொற்று நோய் போல் வரவி வருகிறது. அதிக லைக்குகள் வாக்குவதற்காக எதைப்பற்றியும் கவலைப்படாமல் செல்பி எடுத்து வருகின்றனர்.
இதில் பலர் உயிரிழந்த சம்பவங்களும் உண்டு. ஆனாலும் செல்பி மோகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன. சமீபத்தில் சவூதி அரேபியாவில் சிறுவன் ஒருவன் தனது தாத்தாவின் சடலத்துடன் செல்பி எடுத்து அதனை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பாகிஸ்தானின் பிரபல சமூக சேவகர் அப்துல் சத்தார் எதி       ( வயது 90 ) இவர் உடல் நலகுறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். அவரை பார்ப்பதற்காக பாடகி ரிஸ்வி மருத்துவமனைக்குச் சென்றார். உடல் நலகுறைவாக சிகிச்சை பெற்று வரும் அப்துல் சத்தார் மற்றும் அவரது மனைவியுடன் செல்பி புகைபடம் எடுத்து ரிஸ்வி சிரித்தபடி அதை தனது பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார். இதனை பார்த்த பலர் ரிஸ்வியை கடுமையாக விமர்சித்துள்ளனர்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top