முஸ்லிம்களின் தலைவன் றஊப் ஹக்கீம் அவர்களே!
பத்து இலவச வீசா மூலமாக உம்ராவுக்குச் சென்றவர்கள்
யார் யார் என்பதை வெளிப்படுத்த முடியுமா?
இவ்வாறு விபரம் கேட்கின்றார் ஜெஸ்மியா ஜெம்ஸத் (Jesmiya Jemsath)
அண்மையில்
சவூதி அரேபிய அரசாங்கத்தினால்
நமது நாட்டைச்
சேர்ந்த வசதியற்ற
ஏழைகளும் புனித
உம்ராக் கடமையை
நிறைவேற்ற சந்தர்ப்பம்
வழங்கப்பட வேண்டும்
என்ற நன்நோக்கில்,
உங்களுக்கு பத்து இலவச உம்ரா வீசா
வழங்கப்பட்டதல்லவா? உங்களுக்கு வழங்கப்பட்ட
வீசா மூலமாக
உம்ராவுக்குச் சென்றவர்கள் யார் யார் என்பதை
வெளிப்படுத்த முடியுமா?
அப்படிச்
சென்றவர்களில் எத்தனை பேர் வசதியற்ற ஏழைகள்
இருக்கிறார்கள் என்பதை நாங்களும் தெரிந்து கொள்ள
வேண்டாமா? அவ்வாறு
தெரியப்படுத்தினால், வசதி படைத்தவர்கள்
ஸதக்கா கொடுக்கும்
போது அவர்களையும்
கவனிக்க சந்தர்ப்பம்
கிடைக்கலாம் தானே? அதற்காகவும் சேர்த்துத் தான்
தெரியப்படுத்தச் சொல்கிறோம். இதற்கெல்லாம் நீங்கள் இறைவனிடத்தில்
பதில் சொல்ல
வேண்டி வராதா?
முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எத்தனையோ வசதியற்ற
ஏழைத்தொண்டர்கள், பள்ளிவாசல்களில் கடமை புரியும் வசதியற்ற
இமாம்கள் மற்றும்
முஅத்தின்கள் எத்தனையோ பேர் இருக்கும் போது,
முஸ்லிம்
காங்கிரஸ் அலுவலகத்தில்
கடமையாற்றும் ஒருவரையும், அவரது மனைவியையும் அனுப்பியது
நியாயம் தானா?
மேல் இருந்து
அல்லாஹ், சகலதையும்
பார்த்துக்கொண்டிருக்கிறான் என்பதை மறந்து
விடாதீர்கள்!!!
இதுதான்
தலைவர் காட்டி
தந்த வழி
முறையா.....? இல்லை றஊப் ஹக்கீமுடைய சேவையா.....?
-
Jesmiya Jemsath
0 comments:
Post a Comment