அமெரிக்காவை பழிவாங்குவேன்
ஒசாமா மகன் திடீர் எச்சரிக்கை
:''என்
தந்தையை கொலை
செய்த அமெரிக்காவை
பழிவாங்குவேன்,'' என, அல் - குவைதா பயங்கரவாத
அமைப்பு தலைவர் ஒசாமா பின்லேடனின்
20 வயது மகன்
ஹம்சா பின்லேடன்
எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த,
2011ல், அமெரிக்கப்
படையினரால் பாகிஸ்தானில் கொல்லப்பட்ட ஒசாமாவின் மகன்,
இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள ஒரு ஆடியோவில் கூறியுள்ளதாவது:
நாங்கள்
எல்லாருமே ஒசாமா
தான். பாலஸ்தீனம்,
ஆப்கானிஸ்தான், சிரியா, ஈராக், ஏமன், சோமாலியா
மற்றும் இதர
முஸ்லிம் நாடுகள்
மீது, அமெரிக்கா
அடக்குமுறையை ஏவி விடுகிறது.
இதற்கு
பழிவாங்கும் வகையில், அமெரிக்காவிலும், வெளிநாடுகளிலும் தாக்குதல்
நடத்துவோம். இந்த பழிவாங்கல் முடிவு, ஒசாமாவுக்காக
மட்டுமல்ல, இஸ்லாமை பாதுகாப்பதற்காகவும்தான் எனத்
தெரிவிக்கப்பட்டிருக்கிறது.




0 comments:
Post a Comment