மனைவிக்கு மார்பக புற்று நோய்

விவாகரத்து செய்துள்ள கணவர்

மனைவிக்கு மார்பக புற்று நோய் இருப்பதை அறிந்த கணவர், அவரை விவாகரத்து செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்தைச் சேர்ந்தவர் Inthaneth( 36. இவருக்கு மகள் ஒருவர் உள்ளார். Inthaneth க்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் மார்பக புற்றுநோய் ஏற்பட்டுள்ளது.

இதற்கு அவர் சரிவர சிகிச்சை எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவரது வாழ்க்கையே தற்போது போரட்டமாக மாறியுள்ளது. தற்போது அந்த புற்றுநோய் அவரை சிறுக சிறுக கொன்று வருகிறது.

இவருக்கு புற்றுநோய் வந்தவுடன் அவரின் கணவரின் இவரை விவாகரத்து செய்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் இவர் தன்னுடைய அப்பாவின் வீட்டில் வந்து தங்கியுள்ளார்.

Inthanethக்கு புற்றுநோய் வந்தவுடன் அவரால் சரிவர வேலை செய்யமுடியவில்லை. தன்னுடைய நிலையை நினைத்து தினந்தோறும் அழுத நிலையிலே இருந்துள்ளார்.

இவரின் நிலையை உணர்ந்த பின் என்பவர் அவர்களுக்கு உதவ முன்வந்துள்ளார். தன்னால் முடிந்த அளவிற்கு பணம் கொடுத்து உதவி செய்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், முதன் முதலில் அவர் தன்னை பார்த்த போது அழுததாகவும், அதன் பின்னர் அவர்களின் நிலையை பார்த்த போது தனக்கே பரிதாபமாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும் அவரின் தந்தை ஒரு டாக்சி டிரைவர் அவர் Inthanethன் மகளை படிக்க வைக்க வேண்டும், Inthaneth க்கு சிகிச்சையை வேறு பார்க்க வேண்டும். இதனால் அவர்கள் மிகவும் கஷ்டத்தில் உள்ளதாக கூறியுள்ளார்.


தற்போது அவர்கள் உள்ள சூழ்நிலையில் யாரேனும் உதவினால், அவர்கள் வாழ்நாள் முழுவதும் மறக்கமாட்டார்கள் என்று கூறியுள்ளார். இந்த நோய் Inthaneth க்கு தீவிரமடைந்துள்ளதால், அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கவேண்டும் என்று கூறப்படுகிறது.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top