கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை

பெறுபேறுகள் மார்ச் 28ல்



கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 28ம் திகதி வெளியிடப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
பாடசாலை மட்டங்களில் நடைபெறுகின்ற பிரதான பரீட்சையான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில், சாதாரண தரம் மற்றும் உயர் தரப் பரீட்சைகளின் பெறுபேறுகளை வெளியிடும்போது அவற்றை வருடத்தின் குறிப்பிட்ட திகதிகளில் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் தெரிவித்தார்.


இதுபற்றி கருத்து தெரிவித்தபோது அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் அனைத்து வருடங்களிலும் .பொ. உயர்த் தரப் பரீட்சைகளின் பெறுபேறுகளை டிசம்பர் 27 ம் திகதி வெளியிடுவது எனவும், .பொ. சாதாரணத் தரப் பரீட்சைகளின் பெறுபேறுகளை மார்ச் 28 ம் திகதி வெளியிடுவது எனவும், புலமைப்பரிசில் பெறுபேறுகளை ஒக்டோபர் 05 ம் திகதி வெளியிடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்

2016ம் ஆண்டு சாதாரணதர பரீட்சையில் சுமார் 7 இலட்சம் பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top