ஒலுவில் வைத்தியசாலை!

அம்பியுலன்ஸ் வண்டியின் அவல நிலை

கவனத்தில் எடுக்கப்படுமா?

நோயாளிகளை அவசரமாக வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்ல வேண்டிய அம்பியுலன்ஸ் வண்டியை வைத்தியசாலை ஊழியர்களும் பொதுமக்களும் தள்ளிக்கொண்டு செல்ல வேண்டிய நிலை ஒலுவில் பிரதேசத்தில் காணப்படுவதாக அறிவிக்கப்படுகின்றது.
வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கம், அரசியல்வாதிகள், வைத்தியசாலை நிருவாகம் இந்த அம்பியுலன்ஸ் விடயத்தைக்கூட கவனத்தில் எடுக்காமல் இருப்பதையிட்டு இங்குள்ள மக்கள் மிகவும் கவலையடைந்துள்ளனர்

அவசரத் தேவைக்கு செயற்பட வேண்டிய அம்பியுலன்ஸ், அவசர சிகிச்சைக்காக வேறு சகல வசதிகளும் உள்ள வைத்தியசாலைகளுக்கு கொண்டு  செல்ல முடியாமல் கால தாமதமாகின்ற போது நோயாளர்கள் துரதிஷ்டவசமாக மரணிக்கின்ற சமபவங்கள் இடம்பெற வாய்ப்பு ஏற்படுகின்றது.

எனவே உடனடியாக இது விடயத்தில் சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒலுவில் வாழ் மக்கள்  வேண்டுகோள் விடுக்கின்றனர்.
- ஒலுவில் அஸ்ஹர்.






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top