ஹெலிகொப்டர் கோபுரம் மீது மோதி வெடித்து சிதறி:
5 பேர் பலி

துருக்கி நாட்டில் தொலைக்காட்சி கோபுரம் மீது மோதி ஹெலிகொப்டர் விபத்திற்குள்ளானதில் 5 பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

துருக்கி நாட்டை சேர்ந்த Sikorsky S-76 என்ற தனியார் ஹெலிகொப்டர் ஒன்று 5 தொழிலதிபர்கள் மற்றும் இரண்டு விமானிகளுடன் சில மணி நேரத்திற்கு முன்னர் புறப்பட்டுள்ளது.
ஹெலிகொப்டர் பறந்தபோது வானில் அடர்ந்த பனிமூட்டம் இருந்துள்ளது. சில மணி நேரப்பயணத்திற்கு பிறகு Buyukcekmece பகுதி வந்தபோது திடீரென ஹெலிகொப்டர் விபத்திற்குள்ளானது. சுழன்றுக்கொண்டு கீழே விழுந்த ஹெலிகொப்டர் வெடித்துச் சிதறியுள்ளது.

இந்த விபத்தில் அதில் பயணம் செய்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெடித்துச் சிதறிய ஹெலிகொப்டரின் உடைந்த பாகம் ஒன்று சாலையில் சென்றுக்கொண்டு இருந்த கார் மீது விழுந்துள்ளது. இதில் ஓட்டனருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

விபத்துக் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தியபோது, 236 மீற்றர் உயரத்தில் அமைந்துள்ள தொலைக்காட்சி கோபுரம் மீது மோதி ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானது தெரியவந்தது.

இது குறித்து இஸ்தான்பூர் ஆளுநர் வெளியிட்டுள்ள செய்தியில், விபத்துக் குறித்து பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
Five people are killed as a helicopter crashes into a TV tower moments after taking off in Istanbul
·         It is being reported the helicopter hit a television tower as it flew in dense fog
·         The helicopter belonged to the Eczacibasi group of companies, it has been said 
·         Four Russians, two pilots and a Turkish official were all travelling on the chopper
·         The Russians make up four of the five killed, and the other two are injured 














0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top