லண்டன் வாழ் இலங்கையர்களை சந்தித்து

கலந்துரையாடவுள்ள அமைச்சர் ரிஷாட் பதியுதீன்


லண்டனில் வாழும் இலங்கையர்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
குறித்த சந்திப்பு லண்டன் இலங்கை முஸ்லிம் கலாச்சார மத்திய நிலையத்தில் இன்று நடைபெறவுள்ளது.
ஹரோவிலுள்ள இலங்கைப் பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்துள்ள இந்த நிலையத்தில் இடம்பெறவுள்ள குறித்த சந்திப்பு லண்டன் உள்ளூர் நேரப்படி இரவு 7.45 இற்கு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் அரசியல் சூழ்நிலை, முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்கள், அரசியலைமைப்பு மற்றும் தேர்தல் முறை மாற்றங்கள் தொடர்பில் அமைச்சர் இந்த சந்திப்பில் எடுத்துரைப்பார் எ தெரிவிக்கப்படுகின்றது.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top