கொலை செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட பெண்ணை

பட்டமளிப்புக்கு வருமாறு அழைப்பு!


கொலை செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட பெண்ணை பட்டமளிப்புக்கு சமூகமளிக்குமாறு அழைப்பு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கிழக்குப் பல்கலைக் கழகத்திலிருந்தே அடக்கம் செய்யப்பட்ட பெண்ணுக்கு இவ்வாறு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் மட்டக்களப்பு ஏறாவூரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய தாய், மகள் இரட்டைப் படுகொலைச் சம்பவத்தில் கொல்லப்பட்டவரான ஜெனீராபானு மாஹிர் (வயது 32) என்ற பெண்னுக்கே இந்த அழைப்பு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 8ஆம் திகதி இடம்பெறவுள்ள பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு கூறியே குறித்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது அழைப்புக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டதும் தான் கதறி அழுததாக கணவர் மாஹிர் தெரிவித்துள்ளார்.

ஏறாவூர் நகர பிரதேசத்தில் முகாந்திரம் வீதி முதலாவது குறுக்கு ஒழுங்கையிலுள்ள வீட்டில் வசித்துவந்த தாயான நூர்முஹம்மது உஸைரா (வயது 56) அவரது திருமணமாகிய மகளான ஜெனீராபானு மாஹிர் (வயது 32) ஆகியோர் கடந்த செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top