உயிருக்கு போராடிய
நபர்
யாரும் உதவிக்குவராத
மனிதாபிமானம்
காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்காகி,
வீதியில் காயத்துடன் விழுந்து கிடந்த நபரை, அவ்வழியாகச் சென்றவர்கள், வைத்தியசாலையில்
அனுமதிக்க நடவடிக்கை எடுக்காது வேடிக்கை பார்த்துச் சென்ற சம்பவமொன்று, தம்புள்ளை பிரதேசத்தில்
இன்று பதிவாகியுள்ளது.
இன்று அதிகாலை தம்புளை, பக்கமூன பிரதான வீதியின் 13 மை கல் வீதிக்கு அருகில் பயணித்துக் கொண்டிருந்த நபரை, காட்டு யானை ஒன்று தாக்கியுள்ளது. இந்நிலையில் படுகாயமடைந்து அவர் வீதியில் விழுந்து கிடந்துள்ளார்.
கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலங்களின் பின்னர் அந்தப் பகுதியால் பயணித்த தம்புளை உப பொலிஸ் அதிகாரி இவரை காப்பாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
அதற்கமைய அந்த வீதியில் பயணித்துக் கொண்டிருந்த சிறிய லொறி ஒன்றை நிறுத்தி, காயமடைந்தவரை வைத்தியசாலையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன்போது காயமடைந்து வீதியில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நபரை காப்பாற்ற எவரும் முயற்சிக்காது
வேடிக்கை பார்த்துச் சென்றுள்ளனர் எனத்
தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment