இன்று நிந்தவூரில் பொதுக் கூட்டம்

ஹஸன்அலி உண்மைகளைப் பேசப்போகின்றார்!

இன்று வெள்ளிக்கிழமை (03.03.2017) நிந்தவூர் பிரதான வீதிக்கு அருகாமையில் மாபெரும் பொதுக் கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.
இதில் முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹஸன்அலி பிரதம அதிதியாகக் கலந்து கொள்கின்றார்.
இக்கூட்டத்தில் அண்மைக்காலமாக முஸ்லிம் காங்கிரஸிற்குள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் முரண்பாடுகளைப் பற்றிய தெளிவான விளக்கமொன்றினையும் கட்சியின் தற்கால நடவடிக்கைகளையும் முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்களுக்கும், பொது மக்களுக்கும் அளிக்கவுள்ளார்.

இக்கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளார்கள்என எதிர்பார்க்கப்படுவதாகவும் அறிவிக்கப்படுகின்றது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top