கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வாழ்வாதார
அபிவிருத்தி வேலைத்திட்டங்களை செயற்படுத்துவதற்கு
தேவையான நிதியினை ஒதுக்கிக் கொள்வதற்கு
அமைச்சரவை அங்கீகாரம்
கிராமிய
பொருளாதாரம் தொடர்பான அமைச்சின் மேற்பார்வையின் கீழ்
மாவட்ட செயலாளர்கள்,
பிரதேச செயலாளர்கள்
மற்றும் குறித்த
அரச நிறுவனங்களின்
மூலம் கிராமிய
உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வாழ்வாதார அபிவிருத்தி
வேலைத்திட்டங்களை செயற்படுத்தப்படவிருக்கிறது.
2017ம் ஆண்டு அநுராதபுரம், பொலன்னறுவை
மற்றும் மட்டக்களப்பு
ஆகிய மாவட்டங்களுக்கு
மேலதிகமாக முல்லைத்தீவு,
காலி, மொனராகலை,
இரத்தினபுரி, களுத்துறை, புத்தளம் மற்றும் மாத்தளை
ஆகிய மாவட்டங்களில்
செயற்படுத்துவதற்கும், அதற்கு தேவையான
நிதியினை ஒதுக்கிக்
கொள்வதற்கும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர்
பி.ஹெரிசன்
அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு
அமைச்சரவை அங்கீகாரம்
வழங்கியுள்ளது.

0 comments:
Post a Comment