வயம்ப பல்கலைக்கழக நகர அபிவிருத்தி மற்றும்

மகாவலி இடது கரைக்கீழ் ஆற்றுப்படுக்கை அபிவிருத்தி

என்பவற்றை முன்னெடுப்பதற்காக

சவூதி நிதியத்திடமிருந்து நிதியுதவியினை பெற்றுக் கொள்வதற்கு

அமைச்சரவை அங்கீகாரம்


வயம்ப பல்கலைக்கழக நகர அபிவிருத்திக் கருத்திட்டம் மற்றும் மகாவலி இடது கரைக்கீழ் ஆற்றுப்படுக்கை அபிவிருத்திக் கருத்திட்டம் என்பவற்றை முன்னெடுப்பதற்காக அபிவிருத்திக்கான சவூதி நிதியத்திடமிருந்து மொத்தமாக 273.75 மில்லியன் சவூதி ரியால் மதிப்பீட்டு தொகையினை பெற்றுக் தருவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.

குறித்த நிதியுதவியினை பெற்றுக் கொள்வது தொடர்பான கலந்துரையாடல்களினை மேற்கொண்டு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவதற்கு நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top