நடிகை ஐஸ்வர்யா ராயின் தந்தை காலமானார்!
பிரபல நடிகை ஐஸ்வர்யா ராயின் தந்தை கிருஷ்ணராஜ் ராய் உலநலக்குறைவால் மும்பை மருத்துவமனையில் இன்று மரணம் அடைந்தார்.
பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயின் தந்தை கிருஷ்ணராஜ் ராய் உடல் நலக் குறைவு காரணமாக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஐஸ்வர்யா ராய் தனது தந்தையின் செல்லம். எதுவாக இருந்தாலும் தந்தையிடம் தான் முதலில் கூறுவார். இந்நிலையில் தந்தையின் பிரிவால் அவர் மிகுந்த சோகத்தில் உள்ளார். கிருஷ்ணராஜ் ராய், ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிருஷ்ணராஜ் ராயின் மறைவால் பாலிவுட் வட்டரங்கள் மற்றும் பட்சன் குடும்பம் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
0 comments:
Post a Comment