ஹிந்தி நடிகை ஹேமமாலினி சென்ற கார் விபத்து
4 வயது சிறுமி பரிதாப பலி
பழம்பெரும்ஹிந்தி நடிகை ஹேமமாலினி, இந்தியாவிலுள்ள உத்தரபிரதேச மாநிலம் மதுரா தொகுதி பா.ஜனதா எம்.பி.யாக இருக்கிறார். அவர் நேற்று இரவு ராஜஸ்தான் மாநிலம் தவுசா என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, அவரது கார் விபத்தில் சிக்கியது. அவரது காரும், மற்றொரு காரும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 4 வயது பெண் குழந்தை பலியானது. நடிகை ஹேமமாலினி, நெற்றியில் பலத்த காயம் அடைந்தார். அவரது நெற்றியில் இருந்து இரத்தம் கொட்டியது. அவரது கண்ணிலும் காயம் ஏற்பட்டது. மேலும் குழந்தையின் பெற்றோர்கள் உட்பட 4 பேரும் காயம் அடைந்தனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் காயம் அடைந்த ஹேமமாலினி, உடனடியாக அங்கிருந்து ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே விபத்து காரணமாக நடிகை ஹேமமாலினியின் கார் டிரைவரை பொலிஸார் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர் எனவும் இந்திய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
0 comments:
Post a Comment