பாஜக ஆலோசனை கூட்டம்
மத்திய அமைச்சரவை குறித்து நரேந்திர மோடி தீவிர ஆலோசனை
மத்திய
அமைச்சரவையை இறுதி செய்வதில் தீவிரம்
காட்டி வரும் நரேந்திர மோடி
பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியை சந்தித்து
பேசியுள்ளார். டெல்லியில் உள்ள குஜராத் இல்லத்தில்
தங்கியுள்ள நரேந்திர மோடியை பாரதிய ஜனதா
மூத்த தலைவர் வெங்கையா நாயுடு,
கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா உள்பட மூத்த தலைவர்கள்
சந்தித்து பேசினர். அதிகாலை முதல் நடந்த
தொடர் சந்திப்புகளின் போது அமைச்சரவையில் இடம்
பெறுபவர்கள் பற்றி முக்கிய ஆலோசனை
நடத்தப்பட்டதாக தெரிகிறது. இதன் தொடர்ச்சியாக பாஜக
மூத்த தலைவர் அத்வானியையும் மோடி
சந்தித்து பேசினார்.
அப்போது
மத்திய அமைச்சரவை மற்றும் ஆட்சி அமைப்பது
குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மக்களவைத் தலைவராக அத்வானி விருப்பப்படுவதாகவும்
பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசில் இரண்டாவது
இடத்தை குறிவைத்துள்ளபாதுகாப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்படுவார் என்றும், பாஜக முன்னாள் தலைவர்
நிதின் கட்கரி மீண்டும் கட்சி
தலைவர் பதவியை ஏற்பார் என்றும்
தகவல் வெளியாகியுள்ளது. அத்வானி மற்றும் ராஜ்நாத்
சிங் பதவி குறித்து ஆர்எஸ்எஸ்
தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

0 comments:
Post a Comment