ஒபாமாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து

வெள்ளை மாளிகை முன் நிர்வாண போராட்டம்

அமெரிக்காவில் வெள்ளை மாளிகை முன்பாக ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசாமி ஒருவர் நிர்வாண போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
 அமெரிக்காவில் கோடை வெயில் அதிகரித்துள்ளது. பகலில் அங்கு வெப்பம் 26 டிகிரி செல்சியஸ் காணப்படுகிறது. இது இலங்கையைப்  பொறுத்த அளவில் குறைவு என்றாலும் அமெரிக்கர்களால் இதனை பொறுத்துக் கொள்ள முடியாது. இந்நிலையில் கொளுத்தும் வெயிலில் நேற்று ஆசாமி ஒருவர்  அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் அமைந்திருக்கும் அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகை முன்பு வந்தார்.
அப்போது அவர் தான் அணிந்திருக்கும் ஆடைகளை களைந்து ஜனாதிபதி ஒபாமாவுக்கு எதிராக கோஷம் போட்டார். உடனடியாக சாலையில் சென்ற மக்கள் அங்கு  திரண்டு அவரை செல் போனில் படம் எடுக்கத் தொடங்கினர். தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து யாரும் படம் எடுக்க முடியாதபடி  அவரை சுற்றி வளைத்தனர். அப்போது மாளிகையின் உள்ளே ஜனாதிபதி ஒபாமா, வீட்டு வசதி வாரிய செயலாளர் நியமனம் தொடர்பான உரையை நிகழ்த்திக் கொண்டிருந்தார். இந்த  சம்பவத்தால் வெள்ளை மாளிகை முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக பொலிஸார் அவரை அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் அவரது பெயர் மைக்கேல் பெக்கார்ட் என்பது தெரிந்தது. பொலிஸார் வற்புறுத்தியும்  ஆடைகளை அணிய மறுத்ததால் மைக்கேல் பெக்கார்ட்டை அப்படியே சுற்றி வளைத்து வேனில் ஏற்றி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அவர்  எதற்காக போராட்டம் நடத்தினார் என்பது குறித்து பொலிஸார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர் என அறிவிக்கப்படுகின்றது.

மக்கள் விருப்பம்  மக்கள் விருப்பம்  மக்கள் விருப்பம்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top