கல்முனை ஸாஹிறாக் கல்லூரியின்

பழைய மாணவர் சங்ககொழும்புக் கிளையின் வருடாந்த பொதுக் கூட்டம்

25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பில்


மன்சூர்,ஹரீஸ் ஆகியோரைப் பாராட்டி கெளரவிக்கவும் ஏற்பாடு.






கல்முனை ஸாஹிறாக் கல்லூரியின் (தேசிய பாடசாலை) பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின்  வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு கொழும்பு-07 நெலும்பொக்குன மாவத்தையிலுள்ள நூதனசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் தலைவர் டாக்டர் ஸனூஸ் காரியப்பர் தலைமையில் இடம்பெறவுள்ள  இப்பொதுக் கூட்டத்தில் பிரதிக் கல்வி அமைச்சர் மொஹான் லால் கிறேரோ பிரதம அதிதியாகக் கலந்து கொள்வார்.
திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், முன்னாள் வர்த்தக, வாணிபத்துறை அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் ஆகியோர் உட்பட பல பிரமுகர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.
இப்பொதுக் கூட்டத்தில் கல்முனை ஸாஹிறாக் கல்லூரியின் அபிவிருத்தி சம்மந்தமாக கலந்தாலோசித்து முடிவுகள் பல எடுக்கப்படவிருப்பதுடன் நடப்பாண்டுக்கான புதிய நிர்வாக சபை தெரிவும் இடம்பெறும்.
இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர், பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் ஆகியோர்கள் பாராட்டப்பட்டு கெளரவிக்கப்படவிருக்கிறார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top