கல்முனை ஸாஹிறா பள்ளிவாசலின் தரை ஓடுகள்

சீராகப் பொருத்தாததால் தரை சீரழிந்து பல இலட்சம் சேதம்!

பணமும் பொருளும்  வீணாகிப் போயுள்ளது குறித்து மக்கள் கவலை!!!!


கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை வளாகத்தில் அமையப்பெற்றுள்ள பள்ளிவாசலின் தரை ஓடுகள், முறையற்ற விதத்தில் பொருத்தப்பட்டதன் காரணமாக, அவற்றில் பெரும்பாலான தரை ஓடுகள் கழண்ட வண்ணம் உள்ளன. இவற்றில் சில தரை ஓடுகள் உடைந்தும் காணப்படுகின்றன.

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இப்பள்ளிவாசலானது இவ்வாறு காணப்படுவதால், இதைப் பயன்படுத்தும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் அன்றாட தொழுகையில் ஈடுபடுவதற்கு பெரும் சிரமப்படுகின்றனர். ரமழான் மாதம் நெருங்கி வரும் நிலையில் இதனை விரைவாக செப்பனிட வேண்டியுள்ளது.

நன்மை கருதி மக்களால் பள்ளிவாசலுக்கு வழங்கப்பட்ட பணம் சரியாகப் பாவிக்கப்படாமல் இவ்வாறு முறையற்ற விதத்தில் கருமமாற்றி வீணடிக்கப்பட்டிருக்கிறதே என மக்களால் கவலை தெரிவிக்கப்படுகின்றது 


பள்ளிவாசலின் தரை ஓடுகள், முறையற்ற விதத்தில் பொருத்தப்பட்டதன் காரணமாக, அவற்றில் பெரும்பாலான தரை ஓடுகள் கழண்ட வண்ணம் உள்ளன. இவற்றில் சில தரை ஓடுகள் உடைந்தும் காணப்படுகின்றன. தரையின் அவல நிலையைப் படங்களில் காணலாம். 

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top