நைஜீரியாவில் குண்டுகள் வெடித்து 118 பேர்
பலி
30க்கும் மேற்பட்டோர்
படுகாயம்
தென்னாப்பிரிக்கநாடான
நைஜீரியாவின் மத்திய பகுதியில் உள்ள ஜாஸ்
நகரில் நியூ
அபுஜா மார்க்கெட்
பகுதியில் ஒரு
டிரக்கில் இருந்த
குண்டு பயங்கரமாக
வெடித்தது. தகவல் கிடைத்து போலீசாரும், அவசரகால
ஊழியர்களும் வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
அடுத்ததாக
சுமார் 20 நிமிடங்கள்
கழித்து அங்கு
வந்த ஒரு
மினி பஸ்ஸில்
இருந்த வெடிகுண்டும்
வெடித்தது. இதில் அவசரகால ஊழியர்களும் பெருமளவில்
சிக்கிக்கொண்டனர். இந்த 2 குண்டு
வெடிப்புகளிலும் 118 பேர் பலியானார்கள்.
30க்கும் மேற்பட்டோர்
படுகாயம் அடைந்தனர்.
இறந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என்று அந்த
மாகாண கவர்னரின்
செய்தி தொடர்பாளர்
பாம் அபுயா
தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment