இந்தியாவின் புதிய பாராளுமன்றத்தில்
20
முஸ்லிம் எம்.பி.க்கள்
இந்திய புதிய பாராளுமன்றத்துக்கு 20 முஸ்லிம் எம்.பி.க்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது
மிகவும் குறைந்த எண்ணிக்கையாக கருதப்படுகிறது .உத்தரபிரதேசத்தில் இருந்து ஒரு முஸ்லிம்
கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை. இதே போன்று பாரதீய
ஜனதா கட்சி சார்பிலும் ஒரு
முஸ்லிம் கூட எம்.பி.
ஆகவில்லை.
மம்தா
பானர்ஜி ஆட்சி செய்யும் மேற்கு
வங்காளத்தில் இருந்து அதிகபட்சமாக 7 முஸ்லிம்கள்
எம்.பி.க்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அதற்கு
அடுத்த நிலையில் பீகாரில் இருந்து 4 முஸ்லிம் எம்.பி.க்கள்
தெரிவாகி உள்ளனர். ஜம்மு காஷ்மீரில் 3 முஸ்லிம்களும்,
அசாமில் 2 முஸ்லிம்களும் எம்.பி. ஆகி
உள்ளனர்.
தமிழ்நாட்டில்
ராமநாதபுரத்தில் இருந்து அ.தி.மு.க. சார்பில்
அன்வர் ராஜா எம்.பி.
ஆகி இருக்கிறார்.முந்தைய பாராளுமன்றத்தில் 25-க்கும்
மேற்பட்ட முஸ்லிம் எம்.பி.க்கள்
இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment