நரேந்திர மோடி
அரசில்
விளையாட்டுத்துறை
அமைச்சர் பதவியை ஏற்க தயார்:
துப்பாக்கி சுடும் வீரரான ரத்தோர்
நடைபெற்று
முடிந்த இந்திய பாராளுமன்ற தேர்தலில்
பா.ஜ.க சார்பில்
மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள துப்பாக்கி
சுடும் வீரரான ராஜ்யவர்தன் சிங்
ரத்தோர். இவர் ஒலிம்பிக்கில்
தனி நபர் பிரிவிலான துப்பாக்கி
சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு முதன்முறையாக பதக்கம் பெற்றுத் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெய்ப்பூர் தொகுதியில்
போட்டியிட்ட ரத்தோர், காங்கிரஸ் வேட்பாளர் சி.பி.ஜோஷியை
விட 1,50,000 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி
பெற்றார்.
தனிப்பட்ட
முறையில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஒரு
நபர் மக்களவைக்குத் தேர்வு செய்யப்படுவது இதுவே
முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. மோடி
தலைமையிலான அமைச்சரவையில், விளையாட்டு வீரரான ரத்தோருக்கு, விளையாட்டுத்துறை
அமைச்சர் பதவி அளிக்க வாய்ப்புள்ளதாகக்
கூறப்படுகிறது.
இது
குறித்து ரத்தோர் கூறுகையில், "எனது
தொகுதிக்கு சேவை செய்யவே நான்
விரும்புகிறேன். இருப்பினும் நரேந்திர
மோடி எந்தப் பொறுப்பை அளித்தாலும்
அதனை ஏற்கத் தயாராக உள்ளேன்.அரசியல் அனுபவம் இல்லாத
என்னை மோடி திறம்பட வழிநடத்தினார்”
என்று கூறியுள்ளார்.

0 comments:
Post a Comment