5 வார பெற்ற மகனை
கடுமையாக தாக்கி
கொலை செய்த கொடூர
தந்தைக்கு ஜெயில்
இங்கிலாந்து நாட்டின் தேவானில் தந்தையானதால் தனது வாழ்வு முடிவுக்கு வந்து
விட்டது என்று கோபம் அடைந்த இளம் தந்தை ஒருவன் தனது 5 மாத பச்சிளம் குழந்தையை கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளான்.
தேவானை சேர்ந்த மத்தியூ விக்கென்ஸ்(வயது 24). தனது 5 வார மகனான ரிலே கார்ட்னரை படுகொலை செய்துள்ளான். வீட்டில் தனியாக இருந்த போது
குழந்தையை பலமாக குலுக்கி ஆட்டி,
முகத்தை கட்டிலில் மோத
செய்துள்ளான். இதனால் காயம் அடைந்த குழந்தை இறந்துள்ளது. குழந்தையின் தாய்
ஜெம்மாவும் மிகவும் அலட்சியமாக இருந்துள்ளார். தம்பதியின் மற்றொரு 14 மாத மகனான ஜேடன் மீட்கப்பட்டு குழந்தை பராமரிப்பு மையத்தில்
ஒப்படைக்கப்பட்டுள்ளான்.
குழந்தையின் பிரேத பரிசோதனையில் பலமாக குழுக்கப்பட்டு, கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது. இந்த
கொடூர செயலை செய்த விக்கென்ஸ்சுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 6 ஆண்டுகள் 5 மாதங்கள் சிறை தண்டனை விதித்துள்ளது.

0 comments:
Post a Comment