சென்னையை வீழ்த்தியது
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
சென்னைக்கு
எதிரான போட்டியில்
கொல்கத்தா அணி
8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முன்னதாக டாஸ்
வென்ற கொல்கத்தா
அணி முதலில்
பந்து வீச்சை
தேர்வு செய்தது.
இதனை அடுத்து
களமிறங்கிய சென்னை அணி நிர்ணயிக்கபட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 154 ஒட்டங்கள்
எடுத்தது. சென்னை
அணியில் அதிகபட்சமாக
ரெய்னா 52 பந்துகளில்
3 பவுண்டரி, 5 சிக்சருடன், 65 ஒட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதனை அடுத்து
155 ஒட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்
களமிறங்கிய கொல்கத்தா அணி 18 ஓவர்களில் 2 விக்கெட்டை
மட்டும் இழந்து
156 ஒட்டங்கள் எடுத்து எளிதாக வென்றது.
கொல்கத்தா
அணியில் ராபின்
உத்தப்பா 39 பந்துகளில் 10 பவுண்டரி, 1 சிக்சர் உள்பட
67 ஒட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் அதிரடியாக
ஆடிய ஷகிப்
அல்ஹசன் 21 பந்துகளில் 46 ஒட்டங்கள் எடுத்து வெற்றிக்கு
வழிவகுத்தார்.
0 comments:
Post a Comment