யுத்த வெற்றி
அல்ல
சமாதானத்தை
வெற்றி கொண்ட நாள்
-ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ
இது யுத்த வெற்றி நாள் அல்ல. சமாதானத்தை வெற்றி கொண்ட நாள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் இன்று காலை இடம்பெற்ற யுத்த வெற்றி விழாவில் உரையாற்றும்
போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில் மேலும் தெரிவித்ததாவது:-
30 வருட பயங்கரவாதத்தை ஒழித்ததை நினைவு கூரும் நாள் இது யுத்தம்
தொடர்ந்து இருந்தால் இன்னும் பல உயிர்கள் அழிந்து போயிருக்கும். யார் என்ன சொன்னாலும்
பயங்கரவாதிகளுக்கு எதிராகவே யுத்தம் செய்தோம். தமிழ் சகோதரர்களுக்கு எதிராக அல்ல. வெளிநாடுகளில் உள்ளவர்கள் மீண்டும் யுத்தத்தை
ஏற்படுத்த விரும்புகின்றனர். நாட்டின் தலைவன், தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களின் காவலன்
என்ற ரீதியில் அதற்கு இடம்கொடுக்க மாட்டேன்.
பயங்கரவாதிகள் நாசம் செய்த பிரதேசங்களை அபிவிருத்தி செய்துள்ளோம்.இன்னும் செய்வோம்
- எனவும் அவர் லும் தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment