தமிழக அரசுக்கு முழு ஒத்துழைப்பு
ஜெயலலிதாவிடம் நரேந்திர மோடி உறுதி
தனக்கு வாழ்த்து கடிதம் அனுப்பிய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு, பிரதமராக பதவி ஏற்கவுள்ள நரேந்திரமோடி டெலிபோனில் நன்றி தெரிவித்தார். அப்போது, தமிழக அரசுக்கு, தன் தலைமையிலான மத்திய அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என்றும் நரேந்திரமோடி உத்தரவாதம் அளித்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று, பிரதமராக பதவி ஏற்க உள்ள நரேந்திரமோடிக்கு, தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதினார். இதையடுத்து ஜெயலலிதாவுக்கு நரேந்திர மோடி தொலைபேசியில் நன்றி தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. பெற்றுள்ள மாபெரும் வெற்றிக்கும் அவர் வாழ்த்தும் தெரிவித்துள்ளார். அப்போது, இந்திய பிரதமராக சிறப்பாக செயல்படவேண்டும் என்று நரேந்திரமோடிக்கு, ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்தார். அதற்கு நன்றி தெரிவித்துக்கொண்ட நரேந்திரமோடி, தமிழக அரசுக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு வழங்கி, நல்லுறவுடன் செயல்படும் என்று உத்தரவாதம் அளித்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 37 எம்.பி.க்களும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்
0 comments:
Post a Comment